செவ்வாய், 11 டிசம்பர், 2018

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்?!

      ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்து உள்ளன.


    ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கோன் செய்து பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

 இது எப்படி:


   இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி
 அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும்.


     வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

 யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு UPI2.0 என் பெயரிடப்பட்டுள்ளது..

 #UPI2.0 #HighOnUPI

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு